உன்னை அழைக்கிறார் என்றார்கள்.@எபேசியர் 2:10
portrait
வி. லா. தாம்ப்சன்
1847–1909

வி. லா. தாம்ப்சன், 1880 (Soft­ly and Ten­der­ly Je­sus Is Call­ing) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (ஜூலை 2, 2019),

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

மென்மையாய் இயேசு அழைக்கிறாரே,
உன்னையும் என்னையுமே,
பார் அங்கே வாசலில் காத்துநின்றே,
நமக்காய் காத்துநின்றே,

பல்லவி

சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு
பாவி நீ அழைக்கிறாரே, அன்போடு பாவி நீ வா.

தாமதமேனவர் அழைக்கயிலே,
நமக்காய் வேண்டி நின்றே,
ஏன் இன்னும் அவர் சத்தம் கேளாமலே,
நமக்காய் ஆசீர் தந்தே, நீ வா உன் வீடிதே,

பல்லவி

காலமும் கடந்தே நேரம் சென்றோட,
என் காலம் உன் காலமே,
சூழ்ந்திடும் இருண்ட நிழல்களே,
நமக்காய் வந்திடுதே,

பல்லவி

விந்தையாம் அன்பிது நமக்காயன்றோ?
அவர் தம் வாக்கிதுவே,
பாவிகளாயினும் தயை மன்னிப்பும்,
நமக்காய் தந்திட்டாரே,

பல்லவி