கீர்த்தி புகழ்ச்சி,
உயிர்த்த நம் ராஜனுக்கே,
வெற்றி கொண்டீர் சாவின் மீது
என்றும் எப்போதும்.
பிரகாசித்த விண்ணின் தூதர்
கல்லறை புரட்டி,
சுற்றி வைத்த ஆடை பற்றி
வைத்தார் ஒழுங்காய்
பல்லவி
கீர்த்தி புகழ்ச்சி
உயிர்த்த நம் ராஜனுக்கே,
வெற்றி கண்டார் சாவின் மீது
என்றும் எப்போதும்.
பார், நம்மை காண்கிறார்,
உயிர்த்த நம் மீட்பரே,
வாழ்த்தி நம்மை அன்பாய் வாழ்த்தி
பயம் துக்கம் போக்கியே,
திருச்சபையாக நாமும்
வெற்றி கீதம் பாடுவோம்,
வாழ்கிறார் நம் மீட்பர் இன்றும்
சாவின் கூர் எங்கே?
பல்லவி
சந்தேகியோம் யாம்,
இது முதல் என்றென்றும்,
வாழ்வின் வேந்தர் நீரே,
நீர் அன்றி வாழ்வேது?
எம் வேதனையில் நாங்கள்
வெற்றி பெற்று ஓங்கவே,
யோர்தானையும் கடந்து
உம் வீடடையவே.
பல்லவி