ஹெலன் ஹோவார்த் லெம்மெல் இப்பாடல் 1922ல் கிலாட் சாங்ஸ் எனும் பிரிட்டிஷ் நேஷனல் ஓய்வு நாள் பள்ளி சங்கத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் முதன்முதல் வெளியானது (Turn Your Eyes upon Jesus). இதன் வசனங்கள்: அவரை நோக்கி பாருங்கள் அவர் முகத்தை நன்று பாருங்கள், பின்பு உலகமும் அதிலுள்ளவைகளும் இனி புதுமையான மங்கலில் தெரியத்தோன்றும்
. லில்லியாஸ் டிராட்டர் எழுதிய சுவிசேஷ கைப்பிரதியினால் உந்தப்பட்டு எழுதப்பட்டது. சௌ. ஜான் பாரதி (2018)
என் ஆத்மமே, வேதனை சோர்வோ?
பார் இருளில் ஒளியில்லை, இல்லை,
பார் இயேசுவை ஒளி நீ காண்பாய்,
உன் வாழ்வும் முழுமையாகும்,
பல்லவி
பார் நீ இயேசுவை நோக்கி,
அவர் மகிமை முகத்தைப்பார் நீ,
இவ்வுலகம் மங்கியே போகும்,
அவர் கிருபையே பிரகாசிக்க.
நாம் மரித்து அடைவோம் மறுமையே,
அவர் முன் சென்றார் நாம் அவர் பின்செல்வோம்.
இனி மரணம் வெல்லாது நம்மை
நாம் வென்றோம் இயேசுவினாலே,
பல்லவி
அவர் வாக்கு என்றுமே மாறாது,
நாம் நம்பினால் எல்லாமே நேர்த்தியாம்,
நீ சாகும் இவ்வுலகில் சென்று,
நல் மீட்பின் நற்செய்தி சொல்லு,
பல்லவி