அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.@லூக்கா 2:7
விளக்கம்
தூதர் பாடல்
வில்லியம் பியூகுரீவ், 1881

வில்லியம் செ. டிக்ஸ், தி மேன்ஜர் த்ரோண் 1865 (What Child Is This?). சௌ. ஜான் பாரதி, ஆகஸ்ட் 31, 2018,

கிரீன் ஸ்லீவ்ஸ், கிரீன் ஸ்லீவ்ஸ் 16ஆம் நூற்றாண்டின் ஆங்கில இராகம் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

மரியின் மடியில்
ஓய்ந்து தூங்கிடும்
பாலன் பார் இது விந்தையே?
விண் தூதர் ஆனந்த கீதம் பாடினர்
மேய்ப்பர்கள் மந்தையை காக்க,
இராஜாதி ராஜன் கிறிஸ்துவே,
மேய்ப்பர் கண்டிட தூதர் பாட,
வேக வேகமாய் செல்வோம் பாலனை
போற்றி நாம் பாடியே வாழ்த்த.

ஏன் ஏழைக்கோலமாய்
தாழ்மை ரூபமாய்
மாடடையும் குடிலிலே,
நாம் பாவிகட்காகவே
பயந்து வேண்டியே
சாந்த்தமாய் நின்றங்கே காண்போம்,
கூர் ஆணிகள் பாயும், யாவுமே
உனக்காய் எனக்தாய் சகித்தாரே,
வார்த்தை மாம்சமாயானதின்றிங்கே
மரியன்னையின் மைந்தனே.

பொன் வெள்ளியும்
தூபவர்க்கமும் நாம் தந்திட்டு
வீழ்ந்து பணிந்து வணங்குவோம்,
நீர் ராஜாதி ராஜனாய்
இரட்சிப்பை தந்திட
வந்தீரே வேந்தரே வாழ்க,
போற்றி பாடியே வாழ்த்தி ஏற்றியே
மரியன்னையுடன் பாடிடுவோம்,
ஆ ஆனந்தம் மீட்ப்பர் மண்ணிலே
நமக்காய் பிறந்தார் மகிழ்வோம்.