நான் சிலுவையை தியானிக்கையில்,
மகிமையின் ராஜன் மரித்ததையே,
என் ஆஸ்த்தி யாவும் மிக அற்பமே,
வீண் என்பேன் எல்லா மேன்மையும்.
என் பெருமை நீர் ஆண்டவா,
எனக்காய் மாண்ட என் கிறிஸ்துவே,
என்னை ஈர்க்கும் ஆசாபாசங்கள்,
மீட்பர் இரத்தத்திற்காய் விட்டு ஒழிப்பேன்.
அவர் தலை கால் கரங்கள் மேனியும்,
அன்பும் வேதனையும் கலந்தே,
இவ்விதம் எங்கும் காணக்கூடுமோ?
முள் கிரீடம் மகுடம் ஆனதோ?
அவர் இரத்தம் கருஞ்சிவப்பாய் கசிய,
ஆடைபோல் உடல் முழுதும் படர,
உலகிற்கு நான் மரித்தவனாகி,
எனக்கு உலகே மரித்ததுவாம்.
இவ்வுலகே எனதாயினுமே,
அதை நான் தந்தாலும் ஈடாகுமா?
தெய்வீகமானஅன்பல்லவா?
என் ஆன்மா எந்தன் வாழ்வு யாவும் வேண்டுதே.
பாவிகட்காய் சகித்தே யாவையும்,
சோதனை வேதனை பாடுகளும்,
துதி கனம் மகிமை யாவுமே,
என்றென்றும் அவர்க்கே உண்டாகட்டும்.