நல்லப்போராட்டம் போராடு
கிரிஸ்துந்தன் பலம் உன் வலமே
நீ முற்றும் வாழ்ந்து நிலைத்திரு
நித்திய கிரீடம் உன் மகிழ்ச்சி
சீராய் நேராய் அவர் கிருபையால்
பார்த்தவர் முகமே கண்ணோக்கி
வாழ்வு நம் முன்னே காத்திருக்க
கிறிஸ்து நம் பாதை பரிசும்
வைப்பாய் அவர் மேல் உன் பாரம்
சார்ந்தவர் கிருபை காத்திடவே
காணும் ஆன்மா நற்பலனே
கிறிஸ்துவே வாழ்வும் அன்புமே
அஞ்சாதே அவர் தாங்குவார்
உன் நேசரவர் மாறிடார்
முற்றும் நம்பு நீயே காண்பாய்
கிறிஸ்துனக்கு எல்லாமுமே