🡅 🡇 🞮

கடவுள் நம்மை நடத்துகிறார்

வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். யோவான் 10: 4

ஜார்ஜ் ஏ யாங், 1903 (God Leads Us Along) (🔊 ). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (மார்ச் 29, 2019), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஆ இன்பம் பொங்கிடும் பூஞ்சோலையிலே,
தம் பிள்ளைகளை நடத்தி, அமர்
தண்ணீரண்டை விடுவாரவரே,
தம் பிள்ளைகளை அவரே,

பல்லவி

நீரண்டை சிலர் புயலிலும், எல்லோரையும்
அவர் தம் இரத்தத்தால், துக்கத்தினூடேயும்
பாடல் தந்து இராவிலும் பகலும் என்நேரமும்.

பிரகாசமான மலை மேலானாலும்,
தம் பிள்ளைகளை நடத்தி, பள்ளத்
தாக்கின் இருள் வழியாயினுமே,
தம் பிள்ளைகளை அவரே,

பல்லவி

நம் வேதனையின் மன சோர்விலுமே,
தம் பிள்ளைகளை நடத்தி, அவர்
கிருபையாலே வெல்லவே சத்ருவை,
தம் பிள்ளைகளை அவரே,

பல்லவி

ஆம் தூசியினின்றும் மண்ணினின்றும்,
தம் பிள்ளைகளை நடத்தி, நம்மை
பேரானந்த நித்ய வாழ்வை நோக்கி,
தம் பிள்ளைகளை அவரே,

பல்லவி