தாமஸ் ஒபதியா சிஷோல்ம், 1923 (Great Is Thy Faithfulness). இவரின் கூற்றுப்படி எந்த ஒரு விசேஷ சூழலும் இப்பாடலை இயற்ற காரணமரிருக்கவில்லையாம், மற்றபடி நிஜ அனுபவங்களும் வேதத்தின் உண்மைகளாலும் மட்டுமே எழுதப்பட்டது. முதன் முதல் வெளியானது சாங்ஸ் ஆப் சேல்வேஷன் அண்டு சர்வீஸ் 1923. வில்லியம் ரன்யான் அவர்களால் தொகுக்கப்பட்டது. மூடி வேதாகம நிறுவன பள்ளி பாடலாக இருந்தது, சிக்காகோ, இல்லிநாய்ஸ், இதில் ரன்யான் பல வருடங்கள் தொடர்பு கொண்டிருந்தார். சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 20, 2019),
வில்லியம் மரியான் ரன்யான், 1923 (🔊 pdf nwc). ரன்யான் இப்பாடலுக்காகவே இந்த இராகத்தை இயற்றினார்: இப்பாடல் வரிகளில் ஒரு விசேஷ ஈர்பு இருப்பதை உணர்ந்து நான் மிக உருக்கமாக ஜெபித்து இப்பாடலின் கருத்தை நன்றாக வெளிக்கொணரும்படி இசை அமைய வேண்டுமென வேண்டிக்கொண்டேன், இப்போது அதன் பயன்பாட்டை காணும்போது ஆண்டவர் என் ஜெபத்தை கேட்டாரென்று அறிகிறேன்
.
உம் கிருபை தயவும் மகா பெரிது,
நிழல் போல் மாறிடும் தன்மையல்ல,
மாறிடாதென்றும் உம் தயவன்ரோ?
நேற்றுமின்றும் என்றும் மாறிடாதே,
பல்லவி
மகா பெரியது, உம் கிருபை தயவும்,
அனுதினம் காண்போம் புது கிருபை,
என் தேவை யாவுமே நீர் தாம் சந்தித்தீர்
மகா பெரியதும் கிருபை என் மேல்.
உம் ராட்ஜியம் வந்திட வேண்டுகின்றோம் யாம்,
வாரும் நீர் வேகமாய் காலைத்தோன்ற,
இன் புது பாடல் யாம் பாடிடுவோமே,
சாத்தானொழிந்திட உம் ராட்ஜியமே.
பல்லவி
கோடை குளிர் பனி வசந்த காலம்,
சூரிய சந்திரனின் பாதையிலே,
யாவும் ஒன்றாய் நின்றே சாட்சியாய் கூற,
உம் மகா உண்மையன்பும் கிருபையும்.
பல்லவி
பாவத்தின் மன்னிப்பு மெய் சமாதானம்,
உம் பிரசன்னமுமே தேற்றுதலும்,
இந்நாளின் வல்லமை நாளை நம்பிக்கை,
ஆசீரெல்லாம் தந்து ஆயிரமாய்.
பல்லவி