
பிலிப்பு டாட்ரிட்ஜ் (1702–1751) (Great Source of Being). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 7, 2020),
இராகம் அரிசோனா, ராபர்ட் ஹென்றி எர்ன்ஷா, 1918 (🔊 pdf nwc).

எம் வாழ்வின் மூலாதாரமே,
பிரபஞ்சத்தை நீரே போஷித்தே,
மாந்தரின் எல்லா இன்பமும்,
உம் அன்பு ஊற்றின் சாரலே.
நீர் சொல்ல தூய ஊற்றுமே
கானான் சியோனை கடந்திதோ,
ஆலய வாசல் ஓரமாய்
தீவிரமாக பாயுதே.
பாயும் சிற்றோடை துரிதமாய்,
ஆற்றின் போக்கில் கலந்ததோ,
பாலைவனத்தின் ஓடையாய்,
ஆசீரீந்து தன் பாதையில்.
கரையின் ஓரம் ஓரமெல்லாம்
மரங்கள் சோலையும் தோன்றியே,
நல் மணமெங்கும் வீசிட.
காய் கனி நம்மை போஷிக்க.
சவக்கடலில் பாயவே,
வழியெல்லாம் குணமாக்கி,
விஷம் நஞ்செல்லாம் முரிந்திட.
ஆசீர் தந்தே பாயுதே.
பாய்ந்திடும் விந்தையூற்றே நீர்
பூமியின் எல்லை எங்குமே,
மென்மையாய் எம்மை தேற்றுமே
நன்மை எல்லாம் தந்தீர் போற்றி.