மேரி ஆன் பேக்கர், 1874 (Master, the Tempest Is Raging). சௌ. ஜான் பாரதி (ஜூன் 25, 2022),
ஹோரசியோ ரிச்மண்ட் பால்மர், 1868 (🔊 pdf nwc).
ஆண்டவா புயலைப்பாரும்,
ஆம் சீரியே வீசுதே,
காரிருள் போல் மேகமும் சூழ்ந்தே,
ஒதுங்கக்கரை காணோம்,
அழிந்திடோமோ யாம் மூழ்கி,
உறங்குகின்றீரே, ஒவ்வோர்
நொடியும் நடுங்கச்செய்ய,
ஆழ் கடல் நம் கல்லறையோ?
பல்லவி
ஆம் காற்றும் அலைகளும் கேட்க்குமே,
நில் அமைதி, கடலின் சீற்றமோ,
யாவுமே பேய் ஆயினும் வேறேதுமாயினுமே,
ஆம் கடலின் ஆண்டவா நீர் தங்கும்
எக்கப்பலும் மூழ்கிடாதே,
நீர் ஆண்டவர் விண்ணிற்கும்
ஆம் மண்ணிற்கும் நில் அமைதி, அமைதி யாவும்
உம் சத்தம் கேட்டிடும், நில் அமைதி.
என் ஆன்மா துயரம் கொண்டு,
நான் உம் பாதம் வீழ்கிறேன்,
என் உள்ளம் வியாகுலத்தால் சோர,
விழித்தே நீர் இரட்சியும்,
நீரோடை போல என் பாவம்,
என்னையே மூழ்குதே,
நான் அழிகிறேன் வந்தே தூக்கும்,
ஆம் விறைந்தே காத்திடுமே,
பல்லவி
புயலும் அமைதியாகி,
ஆம் யாவும் ஓய்ந்ததே,
சூர்யனும் நீர் மேலே தோன்றி,
விண் வீடு என் உள்ளத்தில்,
என்னோடே தங்கும் என் நாதா,
தனியே விடாமலே,
நான் ஆனந்த மாகவே சேர்வேன்,
ஆம் விண் வீட்டின் கரையிலே,
பல்லவி