அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.@லூக்கா 2:8–11
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

பிளாசிடே கப்பேயு 1843 (மின்நுயிட் சிரேடியன்ஸ், செஸ்டே ஐ ஹியூரே சொலேநெல்லே) ஓபரா பாடகியான ‘எமிலி லாரே இப்படலை ரோக்குயேமாஉரே என்ற பிரெஞ்சு நாட்டு ஊரில் 1847. ஆம் ஆண்டு பாடினார், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ஜான் ச. டுவய்ட் 1855. சௌ. ஜான் பாரதி (2018),

அடொல்பே சி. ஆதாம், 1843 (🔊 pdf nwc). ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தின மாலையில் கேனடா நாட்டின் விஞ்ஞானியான ரெஜினால்டு ஆ பெசன்டன் என்பவர் இந்த பாடலை வயலினில் இசைத்தது வானெலி மூலம் கடலில் பயணித்துக்கொண்டிருந்த மாலுமிகளுக்காக ஒலிபரப்ப்பட்டது.

உருவப்படம்
Adolphe C. Adam
1803–1856

170 ஆண்டுகள் பழமையான, எவரையும் கவரக்கூடிய இந்த அழகிய பாடலின் சிறப்பு யாதெனில் இக்கால இளைஞர்களும் விரும்பி பாடும்படி இருப்பது என்றால் மிகையாகாது. இதன் ராகம் மட்டுமே ஒரு அரிய படைப்பாக தோன்றுகிறது.

சௌ. ஜான் பாரதி, 2018

தூய இரவு, விண்மீன்கள்
வானில் மின்ன, நம் மீட்பர்
இயேசு இன்று பிறந்தாரே,
நீண்ட காலமாய், பாவ சாபம் மாய்க்க,
நம் ஆண்டவர் தோன்றி உணர்த்தினார்,
ஆ என்ன நம் உள்ளம்
ஆனந்தித்தே பாடுதே,
ஒர் புது காலையும் இதோ,

சாஷ்டாங்கம் செய் இதோ
விண் தூதர் பாடல்,
ஆ தூய இரா நம் ஆண்டவர்
பிறந்தார், இரா தெய்வீகமே,
மா தூயதே, ஆ மா தூய தெய்வீக இரா.

பின் சென்றனர், நம்பிக்கை ஒளி
பின்னே, ஆனந்தமாய் அவர்
முன்னணை முன்னே,
விண் நட்சத்திரம், ஆ வானில்
மின்னவே, வழிகாட்ட
ஞானியர் தொடர்ந்தே,
நம் ராஜாதி ராஜன் ஏழைக்கோலமாய்
நம் பாவம் போக்கி நம் நண்பனாய்,

நம் தேவைகள், பெலவீனமும்,
அறிவார் நம் ராஜாவை
வணங்குவோம், இதோ,
நம் ராஜா, ராஜனே,
மா ராஜாதி ராஜனே.

நாம் பிறர் மேல், அவர்போல்
அன்பாக, நேசிப்பதே அவர் தந்த சட்டமே,
அறுத்தெறிவார், கட்டுண்டோர்க்கவர்
நண்பன், நம்மை அவர் விடுதலை செய்வார்,
நாம் ஆனந்த பாடல் பாடி போற்றியே
நம் முழு உள்ளம் கொண்டு துதிப்போம்,

போற்றிடுவோம் அவர் வல்ல
மகிமை, என்றென்றுமே,
நாம் வாழ்த்தி பாடுவோம், என்றும்
நாம் போற்றுவோம் நம் ராஜனை,
போற்றுவோம் போற்றுவோம்
என்றென்றுமே.