கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே,
தம் தூய இரத்தத்தையே, சிந்தியே,
நம்மை மீட்க, ஜீவ ஊற்றாய் பாய்ந்திடுதே,
பனி போல வெண்மையாய், எனக்காக
கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய்,
பல்லவி
கல்வாரியில் கல்வாரியில்,
எனக்காக, மரித்தாரே
ஆம் சிலுவையில் அன்று.
ஆ என்ன, விந்தையிது? அவர் பாதம்,
சேர்த்தாரென்னை, விந்தையான தெய்வன்பிதே,
என்னையே, அர்ப்பணிப்பேன், எந்தன் ஆவி
எந்தன் எல்லாம், முற்றும் தந்தேன் ஆம் மெய்யாய்,
எனக்காக, கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய்,
பல்லவி
ஏற்றுக்கொள்ளும், என் இயேசுவே, என்றும் என்னை,
உம் பிள்ளையாய், நீரே என்றும் என் சொந்தமே,
என்னுடன், வாசம் செய்யும், பாவம். போக்கி
தூய்மையாக்கும், உந்தன் இரத்தம் சிந்தினீர்,
எனக்காக, கல்வாரி மீதே சிந்தினீர், உம் இரத்தமே,
பல்லவி
சிலுவையில் தொங்கும் நேரம், இருள் மேகம்,
சூழ்ந்ததே, எல்லாம் முடிந்ததென்றார்,
தலை சாய்த்து ஜீவன் விட்டார். அவர்
ஜீவன் தந்ததினால், மனுக்குலம் மீண்டதே,
நமக்காக, கல்வாரி மீதே, சிந்தினார் தம் இரத்தமே
பல்லவி