ஜேசப் மோஹ்ர், ஏறத்தாழ 1816–18 ஆண்டுகளுக்கிடையில். 1 மற்றும் 3 ஆம் சரணங்களை ஜெர்மன் மொழியிலிருந்து ஜான் பிரீமேன் யாங் 1863ல். மொழி பெயர்த்தார், 2 மற்றும் 4ஆம் சரணங்களை மொழி பெயர்த்தவர் யாரென தெரியவில்லை. சௌ. ஜான் பாரதி (டிசம்பர் 20.2018),
பிரான்ஸ் சேவியர் குரூபர், ஏறக்குறைய 1820 (🔊 pdf nwc).
என் இள வயது காலங்கள் முதல் இப்பாடலை கிறிஸ்மஸ் நாட்களில் பாடும்போதெல்லாம், ஆங்கிலத்திலுள்ள கருத்துக்கள் இதிலில்லையே என்று யோசிப்பதுண்டு, மேலும் இதை சைபர் ஹிம்னலுக்காக மொழிபெயர்க்க முனைந்தபோது தமிழில் நாம் பாடுவது முற்றும் வேறொரு பாடல் என்பதை திட்டமாய் உணர்ந்துகொண்டதால் இந்த அழகிய கருத்துள்ள பாடலை தமிழில் எழுதி இயேசு கிறிஸ்துவின் நாம மகிமைக்காக ஒப்படைக்கிறேன்.
சௌ. ஜான் பாரதி, 2018
ஓசையில்லா, தூய இரா,
யாவுமே அமைதியாய்,
கன்னி மைந்தனும் அன்னையுமாய்,
தூய பாலன் பொன் மேனி யுடன்,
தூங்கு சாந்தமாய் நீயும்,
தூங்கிடு சாந்தமாய் நீ.
ஓசையில்லா, தூய இரா,
மேய்ப்பரும் நடுங்கிட,
விண்ணில் பேரொளி வீசிடவே,
தேவ தூதரும் பாடிடவே,
கிறிஸ்து தோன்றினாரே,
கிறிஸ்தேசு தோன்றினாரே.
ஓசையில்லா, தூய இரா,
தந்தையின் மைந்தனாம்,
ஒளிர்விடும் உந்தன் திவ்ய முகம்,
மீட்பின் வாஞ்சையின் சாந்தமன்றோ?
உந்தன் முன்னணை வந்தோம்,
உந்தன் முன்னணை வந்தோம்.
ஓசையில்லா, தூய இரா,
விந்தையாய் நட்சத்திரம்,
ஒளிர்ந்து வீசி நல் பாதை காட்ட,
சேர்ந்து தூதருடன் பாடுவோம்,
பிறந்தார் மீட்பரின்று,
பிறந்தார் கிறிஸ்து இன்று.