பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.@ஏசாயா 6:8
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

தானியேல் மார்ச், 1871, த ச்சார்ம், பிலிப்பு பவுல் பிலிஸ் (சிக்காஹோ, இல்லிநாய்ஸ், ரூட் மற்றும் காடி, 1871, எண் 42) (What Can I Do?). யுவர் மிஷண்—ஒப்பிட்டு பார்க்கவும். சௌ. ஜான் பாரதி (2018),

ஜான் ஜுன்டெல், கிரிஸ்டியன் ஹார்ட் சாங்ஸ் 1870 (🔊 pdf nwc).

உருவப்படம்
தானியேல் மார்ச்
1816–1909

கடலைக்கடக்க முடியாதெனினும்
எங்கும் தேடி செல்லாவிடினும்
கடவுளையறியா மக்களிங்குண்டு
உன் கதவருகே உதவலாமே
உன்னாயிரம் நீ தராவிடினும்
விதவைபோலே சிறு காசெனினும்
இயேசுவுக்காய் நீ செய்யலாமே
விசேஷமாம் அவர்க்கு அது

தூதர் போல பாடாவிடினும்
பவுலைப்போல பேசாவிட்டாலும்
இயேசுவினன்பை சொல்லலாமே
நமக்காய் அவர் மரித்தாரன்றோ?
துன்மார்க்கனை நீ தூண்டாவிட்டாலும்
நியாயத்தீர்ப்பின் கொடுமை கூறி
சிறுவரை நல் வழி நடத்து
காத்திருக்கும் இயேசுவண்டை

நான் என் செய்வேன் என நீ கூற
கேட்போர் இருக்கக்கூடாது
அழியும் ஆன்மா அநேகமிருக்க
ஆண்டவர் உன்னை அழைக்கிறாரே
அவர் தரும் கடமை உடனே ஏற்பாய்
அவரது வேலைதான் உந்தன் மகிழ்ச்சி
அழைக்கும் போது உடன் பதில் சொல்லு
இதோ அடியேன் எனையனுப்புமென்று.
(ஆமேன்)