அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.@லூக்கா 2:7
உருவப்படம்
ரிச்சர்டு வெ ஆடம்ஸ்
1952–

ரிச்சர்டு வெ ஆடம்ஸ், 2007 (When Jo­seph Went with Ma­ry), பாரம்பரிய ஆங்கில கிறிஸ்துமஸ் பாடலினால் ஊக்குவிக்கப்பட்டு இயற்றப்பட்டது. சௌ. ஜான் பாரதி, டிசம்பர் 14, 2018.

லாங்லோபான், ஹிம்னாவு அ தொனாவு தானியேல் இவான்ஸ் (லண்டன் நொவெல்லோ 1865) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

மரி அன்னையுடன் யோசேப்பு தாவீதின் ஊருக்கு,
பிரயாணத்தாலே சோர்ந்தும் தங்க இடமில்லை,
தேடியும் இடமில்லை, அங்கிங்கும் அலைந்தும்,
இடமில்லை, இடமில்லை, ஓர் தொழுவம் வந்தார்.

ஒரு மாளிகையும் தாங்காது, எவ்வண்ண ஆடையும்,
வான் ராஜன் மண்ணில் பிறந்தார் இவ்வேழைக்கோலமாய்,
நம் மீட்பர் இவர்தானே, கந்தைக்கோலம் கொண்டு,
இக்குழந்தையின் தியாகமே, மண்ணோரை மீட்டிடும்.

நல் மேய்ப்பர் மந்தை காத்திட்டு அயர்ந்தே தூங்கையில்,
மீட்பர் பிறந்த செய்தி அங்கே ஒலித்தது,
அஞ்சாதீர்கள் நற்செய்தி சொல்ல நான் வந்தேனே,
என்று கூறியும் மேய்ப்பரும், பயந்து நடுங்க.

அஞ்சாமல் நீங்கள் கேளுங்கள் உங்களுக்காகவே,
தாவீதின் ஊரில் இன்றிரா பிறந்தார் மீட்பரே,
நம்மை மீட்க தன் சொந்த குமாரனைத்தந்து,
இவ்வளவாக நேசித்து நம்மை இரட்சிக்கவே.

அம்மேய்ப்பர் கண்ட காட்சியால் பயந்து வியக்க,
வான் தூதர் சேனை தோன்றியே நற்செய்தி பாடினர்,
ஆ உன்னதத்தில் தேவனுக்கு மகிமையே,
பூமியில் மெய் சமாதானம், மாந்தர் மேல் பிரியம்.

மெய் வாஞ்சையோடு ஆவலாய் பெத்லேகேம் அடைந்து,
கந்தை பொதிந்த கோலமாய் அப்பாலனைக்கண்டார்,
அவர்போல் நாமும் சென்று அப்பாலனை காண்போம்,
நம் இரட்சிப்புக்காய் வந்தாரே, தன் ஜீவனைத்தந்து.